
Artwork by Joseph Feely
குறள் வெண்பா எனும் இலக்கணத்தின் அடிப்படையில் சின்னஞ்சிறிய இரண்டடிகளில் வாழ்வுக்கு தேவையான கொள்கைகளை வகுத்துத் தந்துள்ள திருக்குறளை, உலகப் பொதுமறை, தமிழ்மறை, பொய்யாமொழி, தெய்வநூல், முப்பால்நூல், உத்தரவேதம், வாயுறை வாழ்த்து என பல்வேறு பெயர்களில் சான்றோர்கள் அழைக்கிறார்கள்.
உலக மொழிகளில் கிறிஸ்தவ மறைநூலான பைபிளுக்கு பிறகு அதிகம் மொழி பெயர்க்கப்பட்ட நூலாக திருக்குறள் திகழ்கிறது.
உலகப் பொதுமறை தந்த திருவள்ளுவர் செஞ்ஞாப்போதார், தெய்வப்புலவர், நாயனார், முதற்பாவலர், நான்முகனார், மாதானுபங்கி, பெருநாவலர், பொய்யில்புலவர் என பல சிறப்புப் பெயர்களால் போற்றப்படுகிறார்.